உணவுகளை அளவோடு சமைக்குமாறும், இரவு நேரங்களில் வீடுகளில் உணவு மிச்சமாகக் இருக்கக்கூடாது எனவும் சிறீலங்காப் படையினர் எச்சரித்து வருகின்றனர்.அண்மையில் மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் முழங்காவில் மற்றும் துணுக்காய்ப் பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களிடமே படையினர் இந்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
அடிக்கடி மக்களில் வீடுகளுக்குச் சென்று படையினர் இக்கருத்தினைத் தெரிவித்து வருவதுடன், புதிதாக யாராவது நடமாடுகிறார்களா என விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.



0 Responses to உணவுகளை அளவோடு சமைக்கவும்: படையினர் எச்சரிக்கை!