ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து, இப்போ கோத்தபாய அப்பலோவையும் கடித்துவிட்டார். ஆம் கொழும்பில் இயங்கிவந்த இந்திய தனியார் வைத்திய சாலையான அப்பலே நிறுவனம் தற்போது கோத்தபாயவின் கைகளில் வீழ்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையான அப்பலோ மிகச் சமீபத்தில் லங்கா ஹொஸ்பிடல்ஸ் என பெயர் மாற்றப்பட்டது தெரிந்ததே. இந்த மருத்துவமனையை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ வாங்கியுள்ளதாகவும், இதனாலேயே பெயர் மாற்றப்பட்டதாகவும் கூறப்படும் கூற்றை மறுத்துள்ள மருத்துவமனை பணிப்பாளர் சபை அதுகுறித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அப்பலோ ஹொஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸஸுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையானது நவம்பர் 16 ஆம் திகதி காலாவதுயாகும்போது அப்பலோ என்ற பெயரில் இருந்த தனியார் மருத்துவமனையானது அரச கட்டுப்பாட்டில் வரவேண்டும் என நீதிமன்றம் பணித்துள்ளதையடுத்தே அதன் பெயர் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவை உள்ளடக்கி புதிய பணிப்பாளர் சபை உருவாக்கப்பட்டது.
தனியாரால் கட்டப்பட்ட அப்பலோ மருத்துவமனையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரீலங்கா காப்புறுதியானது அரச கட்டுப்பாட்டில் வந்த பின்னரே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டது. எனவே தமது பங்குகளை நிர்வகிக்கும்பொருட்டு கோத்தபாய இதன் தலைவராகியுள்ளார்.
இருப்பினும், அண்மைக்கால குறிப்பீடுகள் கோத்தபாய ராஜபக்ஷவே அப்பலோ மருத்துவமனையை வாங்கியுள்ளதாகவும், அதனாலேயே பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை தனியார் நிறுவனங்களை ரஜபக்ஷ பிரதர்ஸ் சுருட்டப் போகிறார்களோ !

0 Responses to கோத்தபாயவின் கைகளில் அப்பலே