Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்த கூட்டமைப்பை சேர்ந்த இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் ன்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் ‌‌ன்று செய்தியாளர்களுக்கு பேட்டி ளித்த அவர், இலங்கையில் போர் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. முள்வேலி முகாம்களில் உள்ள எந்த தமிழர்களையும் அவர்களுடைய வாழ்விடங்களில் இலங்கை அரசு மறு குடியமர்த்தம் செய்யவில்லை.

அவர்களை 50 ஆயிரம் பேர், 30 ஆயிரம் பேர் என்று முகாம்களில் இருந்து விடுவித்தார்கள். அவ்வாறு முகாம்களிலிருந்து வெளியேறிய மக்கள் வீடு, வாசலின்றி வசிப்பிடங்கள் ஏதுமின்றி அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எங்கு செல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.

எனவே .நா.மன்றமும், இந்திய அரசும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அங்குள்ள தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை அமைத்து தர வேண்டும். அவர்கள் ஏற்கனவே வசித்த வாழ்விடங்களில் அவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.

முள்வேலி முகாம்களில் உள்ளவர்களை தவிர, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களும், தமிழ் இளம் பெண்களும் தனி இடங்களில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. அவர்களை பற்றிய முழு விவரங்களையும் இலங்கை அரசு வெளியிட வேண்டும். இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி வசதி பெற உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு வெளியேற்றியதே தவிர, தமிழக எம்.பி.க்கள் குழுவின் பயணத்தால் அல்ல. தமிழக எம்.பி.க்கள் குழு அங்கு நேரில் சென்று அந்த காரியத்தை செய்ய முடியும் என்றால் போர் முடிந்த 4 மாதங்களாக இங்கிருந்து ஏன் அவர்கள் அந்த காரியத்தை செய்யவில்லை.

இப்படி தமிழர்கள் மிகவும் அவதிப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களை கொன்றொழித்த அதிபர் ராஜபட்சேவும், முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை ராஜபக்சேவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப்படுகொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாகும். ராஜபக்சேவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும். இதனால் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் எந்த சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை எங்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் ன்று சிவாஜிலிங்கம் கூறினார்.

0 Responses to அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி: சிவா‌ஜி ‌லி‌ங்க‌ம் அ‌றி‌வி‌ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com