Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டதாக அறிவித்த சரத் பொன்சேகா தனக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று தெரிவித்து பாதுகாப்பு கேட்பது ஏன் என்று சிறிலங்காவின் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு போதாது என்று தெரிவித்து உயர் நீதிமன்றில் பொன்சேகா தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித மனித உரிமை மீறல் வழக்கு மீதான விசாரணையின்போதே பொன்சேகாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

மேற்படி வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை உயர் நீதிமன்றில் பிரதம நீதியரசர் தலைமையில் மூன்று நீதிவான்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தனக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் அரசினால் தனக்கு வழங்கப்பட்ட காணியை தனக்கு பெற்றுத்தரும்படியும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து பொன்சேகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, இரண்டு தரப்பினரும் தமது வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் அடுத்து பிரதம நீதியரசர் தெரிவிக்கையில் - சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து இரகசிய மதிப்பீடு ஒன்றினை மேற்கொண்டு அந்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கினை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

0 Responses to புலிகளை அழித்ததாக அறிவித்த பொன்சேகா புலிகளால் ஆபத்து என்று கூறுவது ஏன்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com