இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்பதாலேயே அவர்கள் முகாம்களிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என..
ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகப் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஜனவரிக்கு முன்னர் இந்த மக்கள் விடு விக்கப்படுகின்றமையை இந்த அடிப்படையிலேயே பார்க்கவேண்டும். அதிகா ரிகள் இதனைச் செய்வதற்கு அவசியமான அரசியல் நோக்கங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேராவும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். நீண்ட காலத்தின் பின்னர் முதற் தடவையாக அரசு சிறுபான்மை இனத்தவர்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
"அங்குள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து வசதிகள் இல்லையென தெரிவித்துள்ள அவர் அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபா தமது பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு போதுமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, முகாமிலிருந்து செவ்வாய்க் கிழமை 10 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 10,5 நாள்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன.

0 Responses to அகதிகளின் விடுவிப்பிலும் அரசியல் உள் நோக்கமா?