தமிழீழ நாட்டின் விடுதலைக்கான புதிய ஆடுகளமே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான கட்டமைப்பென அமெரிக்காவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளரான உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:
சிறிலங்கா அரசானது தமிழீழத்தில் தமிழ் தேசிய வலுவை அழித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் வேளையில் உலகெங்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எமது தமிழீழத்திற்கான எழுச்சியை மீளவும் நிலைநிறுத்தியுள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தாலும் மாவீரர் எண்ணங்களை அழிக்கமுடியாது என்பதை மனிக் முகாமில்கூட எமது மக்கள் தீபங்களை ஏற்றி தமது உணர்வை வெளிக்காட்டியுள்ளதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இப்போதும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் பெருந்தொகையான மக்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சரணடைந்த போராளிகளின் நிலை என்பது பற்றி எதுவும் தெரியாமல் இருக்கிறது. சர்வதேச நியமங்களை மீறிய நிலையில் அம்மக்கள் வெளித்தொடர்புகளற்று தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சமுதாயத்தால் பின்பற்றப்படும் பாதுகாப்பதற்கான கடமை (Responsibility To Protect) என்ற சர்வதேச நெறிமுறையும் எம்மக்களின் விடயத்தில் பின்பற்றப்படாமல் விடப்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கிறது.
ஈழத்தமிழர்களின் ஆயுதவிடுதலைப் போராட்டமானது வரலாற்றின் நிர்ப்பந்தமாகவே தொடங்கப்பட்டது. ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தில் முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களையும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்துநிற்கிறோம்.
தற்போதுள்ள தமிழர்களுக்கான அரசியல் இடைவெளியை நிரப்பவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற ஈழத்தமிழர்களின் அடிப்படை கொள்கைகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகவே இது திகழும். அதனூடான ஆடுகளத்தில் எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதில் எமது மாவீரர்களின் தியாகம் உந்துசக்தியாக இருக்கும். அம்மாவீரர்களின் தியாகங்களை நினைவிற்கொண்டு தமிழீழ நாட்டின் விடுதலைக்காக தொடர்ந்து செயற்படுவோம்.

0 Responses to தமிழீழ விடுதலைக்கான புதிய ஆடுகளமே நாடு கடந்த தமிழீழ அரசு கட்டமைப்பு: உருத்திரகுமாரன்