Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கும் நோக்கில் , 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடிப்படையாக வைத்து கனேடிய புலம் பெயர் தமிழ் சமூகத்தினால் டிசம்பர் மாதம் 19ம் திகதியன்று நடாத்தப்படுகின்ற சர்வ ஜன வாக்கெடுப்பை தமிழர் தேசிய சபையோடு இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்தி வரவேற்கின்றது. இவ்வாக்கெடுப்பானது ,ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் வேண்டிநிற்கின்றனர் என்பதனை உலகிற்கு பறைசாற்றுவதற்கு வழிவகுக்கும் . சுயாதீனமான அமைப்பினால் நடாத்தப்படுகின்ற இத் தேர்தலானது 31 தேர்தல் மையங்களில் நடைபெறப்போகின்றது.

சர்வதேச சமூகமானது இலங்கையில் மீளமைப்பு மற்றும் அரசியல் தீர்வு என்பனவற்றை தற்போது வலியுறுத்தி வருகின்றது. இத்தருணத்தில் , இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கு முறைகளுக்கு ஆளாகி வருவதனால் அவர்களால் சுதந்திரமாக தமது அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாது. அதனால் சுதந்திரமான முறையில் எமது அபிலாசைகளை வெளிக்காட்டக் கூடிய நிலையில் வாழும் புலம் பெயர் சமூகமானது தமிழர்களின் அபிலாசைகள் என்ன என்பதனை உலகிற்கு இவ்வாக்கெடுப்பின் மூலம் எடுத்துக்கூற முடியும்.

சர்வதேச தேர்தல் நியமங்களுக்கு அமைவாக சுயாதீனமான தேர்தல் அமைப்பினால் நடாத்தப்படுகின்ற இத்தேர்தல் வெற்றி பெற பிரித்தானிய தமிழர் பேரவையானது , தமிழ் தேசிய சபையுடன் இணைந்து வாழ்த்துகின்றது.

0 Responses to கனடாவில் நடைபெறும் வாக்கெடுப்புக்கு பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com