Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த யான்ஸ் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அதனை தான் நேரில் பார்த்ததாகவும் ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை எனவும் அவரின் மனைவி கூறியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ள விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட தளபதி யான்ஸ் என அழைக்கப்படும் அந்தோனி இராயப்பு அவரின் மனைவி விரோனியா இராயப்பு மேற்குறிப்பட்டபடி தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

என் கணவனின் வயது 40. கடந்த 18.05.2009இல் முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததார் அதனை தான் நேரில் பார்த்தேன். ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை.

யுத்தம் காரணமாக கடந்த 16.05.2009இல் முள்ளிவாய்க்காலிருந்து முல்லைத்தீவு நோக்கி எனது கணவருடன் நானும் 3 பிள்ளைகளும் வந்தபோது, சனநெரிசலில் எனது கணவரை தவறவிட்டேன்.

இருப்பினும் 17.08.2009இல் தங்களது இருப்பிடம் தேடி எனது கணவர் வந்தடைந்தார். கடந்த 18.08.2009இல் கத்தோலிக்க அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் எனது கணவரும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான இளம்பருதி, வேலவன், பாபு, ஈழவன், ரூபன், குமரன் ஆகியோர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

இவர்கள் சரணடைவதை நான் நேரில் பார்த்தேன். சரணடைந்த இவர்கள் பஸ் ஒன்றில் ஏற்றப்பட்டார்கள். இதன் பின்னர் அவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவித தகவலும் இல்லை என்றார். எனது கணவரை மீட்டுத் தருமாறும் அந்தோனி இராயப்புவின் மனைவி கோரிக்கை விடுத்தார்.



0 Responses to சரணடைந்த விடுதலைப் புலிகளின் மன்னார் தளபதியின் தகவல்களில்லை(படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com