இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்ட தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர முடியும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இறுதி மோதல்கள் நிறைவுற்று ஆறு வருடங்கள் நிறைந்துள்ள நிலையில், முதற்தடவையாக கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதியில்லை என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இலங்கையில் ஆயுத மோதல்களின் முடிவு ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களோடு 2009, மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நிறைவுக்கு வந்தது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்களின் போக்கில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய ஆயுத போராட்டத்தின் நிறைவாகவும் அந்த நாளைக் கொள்ள முடியும்.
இந்த நிலையில், மோதல்களுக்குள் சிக்கி உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கான ஒருங்கிணைந்த தினமாக ‘மே 18’ஐ தமிழ் மக்கள் கொள்கின்றனர். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் எந்தவொரு தருணத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதை அனுமதிக்கவில்லை. அதுவும், உயிரிழந்தவர்களுக்கான சமய சடங்குகளைச் செய்வதைக் கூட அச்சுறுத்தல் விடுத்து தடுத்து வந்தது.
கடந்த வருடமும் கூட யாழ் கீரிமலையில் சமய சடங்குகளுக்காக சென்ற மக்கள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டார்கள். அத்தோடு, ‘மே 18’ஐ போர் வெற்றி நாளாக அறிவித்து பெரும் கோலாகலமாக அரசாங்கம் கொண்டாடி வந்தது.
ஏற்கனவே காயங்களோடு இருக்கும் மக்களின் மீது மனோ ரீதியான தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சியாகவே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் பார்க்கப்பட்டது. இந்த முயற்சிகளில் அதிக பங்கினை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆற்றினார். மக்கள் நினைவு கூரப்படுவதை புலனாய்வாளர்களை கண்காணிப்பு எனும் ரீதியில் ஏவிவிட்டு அச்சுறுத்தலுக்குள் வைத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதோடு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சில நம்பிக்கைக் கீற்றுக்களை தென்பட வைத்திருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகவே, மோதல்களில் கொல்லப்பட்டவர்களை தமிழ் மக்கள் நினைவு கூர முடியும் என்கிற அறிவிப்பையும் கொள்ள முடிகின்றது.
அத்தோடு, போர் வெற்றி நாள் எனும் பெயரில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டதை நினைவு கூரும் தேசிய நிகழ்வாக ‘மே 19’ஐ புதிய அரசாங்கம் அனுஷ்டிக்க முடிவு செய்திருக்கின்றது. இது, பெயரளவிலான மாற்றமாக கொள்ளப்பட்டாலும், கூட இணக்கப்பாடு நோக்கிய முன்நகர்வாக கருத முடியும்.
ஆனால், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் விரைவில் பொதுத் தேர்தலொன்றை நடத்தவுள்ள நிலையில், மறுபுறம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பௌத்த இனவாதத்தை பெருமளவில் நம்பி களமாடுகின்றனர்.
குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ ‘மே 18’ தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பு அச்சம் கொள்ள வைக்கின்றது. பயங்கரவாதத்திலிருந்து நாடு காப்பாற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் வீடுகளில தேசியக் கொடி அல்லது பௌத்த மதக் கொடியை ஏற்றுமாறு கோரியிருக்கின்றார். தேசியக் கொடியை ஏற்றக் கோருவதில் நியாயங்கள் இருந்தாலும், பௌத்த மதக் கொடியை ஏற்றக் கோருவதற்குப் பின்னாலுள்ள இனவாத- மதவாத அச்சுறுத்தல் பெரிதாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது. இது, புதிய அரசாங்கத்தின் மீதான அச்சுறுத்தலாக கருதலாம்.
நினைவு கூருதலை அனுமதிப்பதை நல்லிணக்கத்தின் முதற்படியாக கொள்ள முடிந்தாலும், அதனை தமிழ் மக்கள் முழுமையாக நம்புவதற்கான நகர்வுகளை புதிய அரசாங்கம் இன்னும் செய்ய வேண்டியிருக்கின்றது. ஏனெனில், நினைவு கூருதலோடு மட்டுமே கொல்லப்பட்ட உயிர்களுக்கான நியாயம் கிடைத்துவிடாது. மாறாக, மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்க்கமான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படும் போதே, நல்லிணக்க நகர்வுகள் மீது தமிழ் மக்கள் உண்மையான நம்பிக்கை கொள்ள முடியும்!

0 Responses to மே 18: நினைவு கூருதலுக்கான அனுமதி!