Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் பிரசாரத்துக்கு யாழ்ப்பாணம் சென்ற எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு அங்கு இராணுவத்தினரின் உச்சப்பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் பிரமுகர்களுக்கு வழங்கும் காவல்துறை பாதுகாப்பும் அவருடன் சென்ற அரசியல்தலைவர்களுக்கும் போதியளவு வழங்கப்படவில்லை என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் சென்ற பொன்சேகா தலைமையிலான குழுவினர் பலாலி விமானநிலையத்தை சென்றடைந்தனர். முன்னாள் இராணுவ தளபதியான பொன்சேகாவை யாழ் மாவட்ட இராணுவ தளபதி விமானநிலையத்தில் வந்து வரவேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் யாழ் மாவட்ட இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் எவருமே பொன்சேகா எவரும் அங்கு வரவில்லை. நாகவிகாரையின் பிரதம பிக்கு மாத்திரமே பொன்சேகாவை பலாலி விமானநிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

தென்னிலங்கையிலிருந்து வரும் அரசியல் தலைவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வழங்கப்படும் காவல்துறை பாதுகாப்பும் பொன்சேகா உட்பட அவருடன் சென்ற அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நீக்கப்பட்டிருந்தது.

பொன்சேகாவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசநாயக்க, ரவி கருணாநாயக்க, ஜெயலத் ஜெயவர்த்தன, பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

0 Responses to பொன்சேகாவுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அவமான அனுபவம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com