அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்களை விடவும், இந்தியாவினால் யுத்தம் தொடர்பாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மிகவும் அதிகம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், சூட்சுசமான முறையில் முறையில் இந்தியாவுடனான உறவுகளை இராஜதந்திர ரீதியில் அணுகியதனால் சிக்கல்கள் இன்றி யுத்தத்தை முன்னெடுக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு பதக்கம் அணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பிற்பகுதியில் வடக்கில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன. அதன்போது யுத்தத்தை நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் மிகக் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தது.
எனினும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என இந்திய அரசாங்கத்துக்கு அறிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எந்த சந்தர்ப்பத்திலும் யுத்தத்தை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.
திருகோணமலை, இராணுவத்தின் 22 ஆவது படையணியினரின் முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்
0 Responses to நாம் தந்திரமாக இந்தியாவை ஏமாற்றினோம்: சிறீலங்கா