
ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட இரகசிய பேச்சுக்களின் அடிப்படையில் பிள்ளையான் குழுவினருடன் பல இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியிலிருந்து பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தவர்களுக்கு அரச தரப்பிலிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியம் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது பெயர்கள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாத்திரமே வெளியிட தீர்மானித்திருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுக்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளன என்றும் பொன்சேகாவுக்கான அவர்களது ஆதரவை வெகுவிரைவில் அவர்கள் அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 Responses to பிள்ளையான் குழுவில் பலர் பொன்சேகாவுக்கு ஆதரவு: பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறது ஐ.தே.க.