அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளுக்கு கோத்தபயாவே பொறுப்பானவர் ஆனால் அவர் தற்போது என்னை குற்றம் சுமத்துகின்றார்.
படுகொலைகளை மேற்கொள்வதற்கென கோத்தபயா ஒரு குழுவை வைத்துள்ளார். அவர்கள் தான் போர் நடைபெற்ற காலப்பகுதியில் பெருமளவான படுகொலைகளை மேற்கொண்டவர்கள்.
நான் எனது சீருடையை துறந்த பின்னர் முதலில் களணியில் உள்ள பௌத்த விகாரைக்கு சென்றேன், ஆனால் துட்டகெமுனுவின் (கோத்தபயா) கும்பல் என்னை அங்கு தாக்க முனைந்தனர். என்னிடம் எதிர்த்து தாக்குவதற்கு போதுமான ஆட்பலம் இருந்தது ஆனால் நான் அவ்வாறு தாக்க முனையவில்லை. அந்த சமயம் என்னிடம் 60 பாதுகாப்பு வீரர்கள் இருந்தனர்.
அந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை விகாரையின் மதகுரு அரச தலைவரிடம் மேற்கொண்டிருந்தார். ஆனால் துட்டகெமுனுவின் (கோத்தபயா) கும்பல் மன்னிப்பு கோரவில்லை மகிந்தா தான் மன்னிப்பு கோரினார். துட்டகெமுனுவின் நடவடிக்கை தொடர்பில் மகிந்தவுக்கு எதுவும் தெரியாது எனில் அவர் ஏன் துட்டகெமுனுவுக்காக மன்னிப்பு கோரவேண்டும்.
எதிர்வரும் 26 ஆம் நாளுக்கு பின்னர் கொலைகார கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையினை நாம் மேற்கொள்வோம். அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடலாம். அவர்களுக்கு பால்சோறு அளித்தவர்களும் தப்பியோட நேரிடும்.
இந்த கொலைகார கும்பலை தொலைக்கும் காலம் கைக்கெட்டிய தூரத்தில் நெருங்கிவிட்டது. பாதுகாப்பு படையினரில் 95 விகிதமானோர் எனக்கு ஆதரவாக உள்ளனர். படையினர் மக்களுடன் இணைந்து ஆதரவுகளை வழங்குவது இதுவே முதல் தடவை. எனவே எனது தேர்தல் வெற்றி ஒரு வரலாற்றை உருவாக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு கோத்தபாயாவே பொறுப்பு: பொன்சேகா