
அப்பகுதி மக்களின் வீடுகளிலுள்ள பெறுமதியான மரங்கள், கதவுகள், யன்னல்கள் என்பவற்றை அப்புறப்படுத்தி மணலாற்றுப் பகுதி ஊடாக சிங்கள பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் -
சிறிலங்கா இராணுவத்தினரால் மாங்குளத்தில் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் மக்களிடம் சூறையாடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களும் விற்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வான்கள், உந்துருளிகள் என்பன வீதியின் அருகாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்ததாகவும் -
ஒரு உந்துருளியை 500 ரூபாவுக்கு சிறிலங்கா இராணுவத்தினரின் வணிக நிலையத்தில் வாங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
0 Responses to முல்லைத்தீவில் மக்கள் சொத்துக்களை சூறையாடி மணலாற்று பகுதியூடாக எடுத்து செல்லும் படையினர்!