இந்த அழைப்பின் பிரகாரம், நேற்றுத் தமது நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்துக்கு மத்தியில் மதியவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாகச் சென்று சந்தித்து உரையாடினார். பின்னர் ரணிலுடன் அவர் சென்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவையும் சேந்தித்தார்.
இதேசமயம், தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பும் மீண்டும் பேச விரும்புகின்றது என்ற செய்தியும் அழைப்பும் நேற்று முன்தினம் இரவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மூலமும் திரும்பவும் ஒரு தடவை சம்பந்தருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி சார்பில் அவரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்புத் தலைமையைச் சந்திக்க விரும்புகின்றார் என்ற தகவல் அச்சமயம் கூட்டமைப்புத் தலைமைக்கு அறிவிக்கப்பட்டது என அறியவந்தது.
இதேசமயம், ஜெனரல் பொன்சேகா தரப்பில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தும் சம்பந்தருக்கு அழைப்புக் கிடைத்தது. நேற்றுக்காலை 10.45 மணியளவில் ஆரம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் பிற்பகல் 2.45 மணியளவில் மதிய போசன இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு அது மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த இடைவெளிக்குள் சம்பந்தர் எம்.பி., ரணில் விக்கிரமசிங்கவையும் அவருடன் சேர்ந்து சென்று சரத்பொன்சேகாவையும் சந்தித்தார் எனத் தெரியவந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்குத் தமிழர்களின் வாக்குகள் இன்றியமையாதவை எனக் கருதும் இரு பிரதான வேட்பாளர்களின் தரப்பினரும், தமிழர்களின் வாக்குகளை வளைத்துப்போடும் இலக்குடன் உறுதியுடன் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்குத் தமது தரப்பை ஆதரிக்கும்படியான முடிவை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று கூறப்பட்டது.
0 Responses to முடிவை அறிவிப்பதற்கு முன் சம்பந்தரை சந்திக்க விரும்புவதாக கோத்தபாய அவசர அழைப்பு!