Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் 90 வீதமான இராணுவத்தினரும் காவல்துறையினரும் தனக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் ஆளும் கட்சியின் தவறான வழிநடத்தலில் சிக்ககொள்ளாமல் சரியான தேர்வை அனைவரும் தெரிவுசெய்யவேண்டுமெனவும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு கம்பல் பாக்கில் நேற்று நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தான் ஆட்சிக்கு வந்தவுடன்களனியின் துட்டகைமுனுக்கள்போன்ற பாதாளஉலக கும்பல் மீது நடவடிக்கை எடுப்பார் எனவும் குறிப்பிட்டார். சரத் பொன்சேகா முன்னர் களனியிலுள்ள பௌத்தவிகாரைக்கு வழிபாட்டுக்காக சென்றபோது விகாரைக்கு முன்பு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சரத் பொன்சேகாவை விமர்சித்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி குறிப்பிட்ட சரத் பொன்சேகாவிகாரைகள் புனிதமான இடங்களாகும். அதனை பொருட்படுத்தாமல் அதன் புனிதத்தை கெடுக்கும் விதத்தில் ஆளும் கட்சியின் உத்தரவின்படி நான் வழிபடச்சென்ற களனி விகாரையின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். அவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்எனவும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஆட்சிதான் அமுலுக்கு வரும் என்ற ஆளும் கட்சியின் குற்றசாட்டை சுட்டிக்காட்டிய அவர், தான் அவ்வாறு இராணுவஆட்சியை கொண்டுவர விரும்பியிருந்திருந்தால் அதற்குவெறுமனே நான்கு பட்டாலியன்களே தனக்கு போதுமானதாக இருந்திருக்கும் எனவும் ஆனால் தான் நாட்டுக்காக அவ்வாறு செய்யவில்லையெனவும் குறிப்பிட்டார்.

அப்பேரணியில் உரையாற்றிய ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஆளும் கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் விரைவில் தம்முடன் அணிசேர்வார்கள் எனவும் நாட்டை புதிய பாதையில் வழிநடத்தி செல்லவே தாமும் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அரச பயங்கரவாதமே எதிர்கட்சிகளை தேர்தல் சமயத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் அமரசிங்க குறிப்பிட்டார்.

இப்பேரணியில் ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவும் உரையாற்றினர்.

0 Responses to தொண்ணூறு சதவீதமான படையினர் தேர்தலில் தனக்கே ஆதரவளிப்பர் என்கிறார் பொன்சேகா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com