
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று கொழும்பில் கூடி முக்கிய சந்திப்பை மேற்கொண்டு, அரசதலைவர் தேர்தலில் கூட்டமைப்பு இவ்வளவு காலமும் மேற்கொண்ட பேச்சுக்களின் சாராம்சம் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுக்களின் பின்னர் பொன்சேகாவை கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்து பேசினார்.
வவுனியாவில் நேற்றையதினம் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு கொழும்பு வந்த பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பிரசாரக்கூட்டத்திற்கு செல்லவிருப்பதால், அதற்கு முன்னர் அவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து இறுதிமுடிவு பற்றி தீர்மானிக்க முடிவுசெய்தார்.
இதன்பிரகாரம், தமிழ்க்கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பில் தனது இறுதி உறுதிமொழியை தெரிவித்ததை அடுத்து கூட்டமைப்பும் தனது முடிவை அறிவித்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்க்கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Responses to அரசதலைவர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க த.தே.கூட்டமைப்பு தீர்மானம்!