தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரனின் தாய் திருமதி. பார்வதியம்மாள் 80 வயதை எட்டியவர், பக்கவாத நோயால் பகலும் இரவும் துடித்துக்கொண்டிருப்பவர், தாய்த் தமிழ் நாட்டிற்கு சட்டப்படி விசா பெற்று சிகிச்சைபெற வந்தவர்.அவரை விமானத்திலிருந்து தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பிய மத்திய, மாநில அரசுகளே எங்கே போனது உங்கள் மனிதாபிமானம்?
திருப்பி அனுப்பியதே இந்திய நாட்டிற்கு அவமானம். அவரை முதலில் ஏன் ஏற்றினீர்கள் விமானத்தில்?
மற்றவர்களுக்கு உதவும் மத்திய அரசே எம் தமிழ் மாவீரனைப் பெற்ற தாயைத் தடுத்தது ஏன்?
செம்மொழி மாநாடு என்று, மானாட, மயிலாட தம்பட்டம் அடிக்கும் மாநில அரசே! எங்கே போனது உன் தமிழ் முரசு?
மீண்டும் மீண்டும் துரோகத்திற்குத் துணைப் போகலாமா தமிழக அரசு?
அந்த அம்மையார் மீது உங்களுக்கு ஏன் வெறுப்பு?
சிகிச்சை பெற வந்த அவரைத் திருப்பி அனுப்பியதால் அவர் உயிருக்கு நீங்களே பொறுப்பு!



0 Responses to தமிழீழத் தேசியத் தலைவரின் தாயாரைத் திருப்பி அனுப்பியது ஏன்? டி.ராஜேந்தர், வைகோ, நெடுமாறன் (காணொளி)