சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கும் நிபுணத்துவ குழுவை அமைக்க தேவையில்லை என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேரடியாக சென்று முன்வைத்த கோரிக்கையை செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்துள்ளார். தனக்கு ஆலோசனை வழங்கும் நிபுணத்துவ குழு அமைக்கும் தனது முடிவில் மாற்றமில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் இடையிலான இந்த சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடத்தேவையில்லை என்று ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் எடுத்துக்கூறியிருந்தார்.
ஆனால்,சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. சபை பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டிய தேவை இருப்பதாகவும் அதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வது குறித்த தனது நிபுணத்துவக்குழு திட்டமிட்டபடி அமைக்கப்பட்டும் என்றும் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார்.
சிறிலங்காவுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசும் விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். அந்த ஆணைக்குழு தனது நாட்டின் தேசிய நல்லிணக்க நடவடிக்கையின் ஒரு அங்கமாக தனது பணிகளை மேற்கொள்ளும். அந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐ.நா. நிபுணத்துவக்குழு செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் என்றும் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா. செயலாளர் நாயகத்துடனான சந்திப்பை நிறைவு செய்துகொண்டு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வோஷிங்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அமெரிக்காவின் வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி கொண்டலிஸா ரைஸ் மற்றும் பலரை சந்தித்து பேசவுள்ளார்.

0 Responses to ஐ.நா. நிபுணத்துவக்குழு அமைக்கவேண்டாம் என்று பீரிஸ் முன்வைத்த கோரிக்கையை மூன் நிராகரிப்பு