
சிறிலங்காவில் தற்போது போர் முடிவுற்றிருப்பதால் அங்கு அமெரிக்க நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் அவற்றின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மனித உரிமை மீறல் தொடர்பில் தாம் கவனம் செலுத்தவில்லை என்பதுடன், இது குறித்த அமெரிக்காவின் கருத்துக்கள் தம்மை கோபமடையச் செய்யவில்லை எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மனித உரிமைகள் விவகாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டதாக அமையக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
0 Responses to மனித உரிமைகள் விடயத்தை விட சிறிலங்காவில் நலன் கொள்ள எத்தனையோ விடயங்கள் உள்ளன