Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பேற்றல் குறித்து தமக்கு ஆலோசனைக் கூறக் கூடிய நிபுணர் குழுவை அமைக்க தான் தொடர்ந்து முயன்று வருவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். ஆனால் இதற்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் சம்மந்தமான விடயங்களில் பொறுப்பேற்றல் குறித்து இலங்கை அரசு ஏற்கனவே அளித்த உறுதிமொழிகள் எந்த அளவுக்கு அமல் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சர்வதேச அளவில் உள்ள அனுபவங்கள் மற்றும் ஏற்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் தனக்கு அறிவுறை கூறக்கூடிய நிபுணர் குழு அமைப்பது குறித்து முயற்சி எடுத்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை கூற ஒரு நிபுணர் குழுவை அமைக்கப் போவதாக நா பொதுச் செயலர் கூறி 80 நாட்கள் ஆன நிலையில், இது தொடர்பில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் போனதற்கு இலங்கை அரசின் அழுத்தம் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இலங்கை மறுப்பு

இலங்கையில் ஏற்கனவே ஒரு விசாரணைக் கமிஷன் அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இது பற்றி விசாரிக்க ஒரு சர்வதேச அமைப்பு தேவையில்லை என்று நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதர் பாலித கொஹன்னா தமிழோசையிடம் தெரிவித்தார்.

நா பொதுச் செயலர் நிபுணர் குழுவை நியமிப்பதற்கான தேவை தற்போது இல்லை என்று வெளியுறவுத் துறைச் அமைச்சர் ஜி எல் பீரிஸ் தலைமைச் செயலர் பான் கீ மூனிடம் தெரிவித்ததாகவும் பாலித கொஹன்னா மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சரான ஜி எல் பீரிஸ் அவர்களை திங்கள் கிழமை சந்திக்கும் முன் செய்தியாளர்களை சந்தித்த நாவின் பொதுச் செயலர் பான் கி மூன், இலங்கை அமைச்சரை சந்திக்கும் போது போரால் இடம்பெயர்ந்தோரின் நிலையை மேம்படுத்த வேண்டும் -அவர்களை விரைவில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும், நல்லிணக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்தவேண்டும், மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்பேற்கும் நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் ஆகிய மூன்று விடயங்களை வலியுறுத்துவேன் என்று கூறினார்.

மறுப்பு

ஆனால் வெளிநாட்டு விசாரணைகளை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது போன்ற ஒரு விசாரணைக் குழுவை அமைப்பதற்கு தார்மீகரீதியான அடிப்படை ஏதும் கிடையாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் நா பொதுச் செயலரிடம் கூறியுள்ளார்.

போரின் இறுதி கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து வெளியாகும் சேனல் 4, சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹ்யூமன் ரைட் வாட்ச், சர்வதேச நெருக்கடிக் குழு போன்றவை போர் குற்றம் தொடர்பான புதிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் வெளியிட்டுள்ள நிலையிலும் இலங்கை அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை.

0 Responses to போர்குற்றம்: ஐ.நா வுடன் ஒத்துழைப்பில்லை சிறீலங்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com