தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே அவர்களை முகாம் மக்களைப் பார்வையிட அனுமதிக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை முகாம் மக்களைச் சந்திக்க அனுமதிக்காமை தொடர்பில் ஊடகம் ஒன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நலன்புரி முகாம்களைப் பார்வையிடச் செல்வதற்கென சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளைக் கைக் கொண்டாலேயே குறித்த மக்களைச் சென்று பார்வையிட முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நலன்புரி முகாம் மக்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற்றிருந்தால் அவர்கள் மக்களைப் பார்வையிட அனுமதிக்க முடிந்திருக்கும் என்றும் பிரசாத் சமரசிங்க தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மகிந்தராஜபக்சவின் பிரத்தியேக செயலர் லலித் வீரதுங்கவிடம் வன்னிக்கான பயணம் குறித்து விரிவாகத் தெரிவித்திருந்தாக ஊடகங்களிடம் கூறியிருந்தார். ஜனாதிபதி மகிந்தராஜபக்சவே பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பையும் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறவில்லை என்கிறார்: பிரசாத் சமரசிங்க!