Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளான புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் (சென். பற்றிக்ஸ்), வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியின் போது பழைய மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.

புனித பத்திரிசியார் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. ‘பொன் அணிகளின் மோதல்’ என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றன.

இந்தநிலையில், இரண்டு பாடசாலைகளுக்கும் இடையிலான 26வது வருட கிரிக்கட் போட்டிகளின் ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அதன்போதே, இரு பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவனான யாழ்ப்பாணம் செட்டியார் தெருவைச் சேர்ந்த ஜெயரட்னம் தர்ஷன் அமல்ராஜ் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இளைஞர்களுக்கிடையே மோதல் நிலை உருவாகிய போதும் பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கைளையும் எடுக்கவில்லை என்று அங்கிருந்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

0 Responses to யாழ் பொன் அணிகளின் மோதல்; கைகலப்பில் இளைஞர் பலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com