
சிறிலங்கா ஊடக மத்திய நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த வருடம் மே மாதம் வன்னியில் இறுதிக்கட்டப்போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சீனாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது, களமுனை கட்டளைகளை வழங்கி போரை நடத்தியவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆவார்.
நாட்டில் இராணுவ தளபதி இல்லாவிட்டால் அடுத்தநிலை தளபதிகள் அவரது பொறுப்புக்களை மேற்கொள்வது வழமை. அதன் பிரகாரமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் கூறினார்.
முன்னாள் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சந்திரசிறி தற்போது வட மாகாண ஆளுனரான பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to இறுதிப்போரை நடத்தியவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி: பொன்சேகா அல்ல