கடந்த மாதம் நடுப்பகுதியளவில் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் உள்ளது தனது மகன் எனவும் அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் பணியாற்றிய போது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 மற்றும் 19 ஆம் நாட்களில் முள்ளிவாய்கல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கலாம் என அவரின் தந்தையார் தெரிவித்துள்ளார்.
முன்னர் குறிப்பிட்டது போல தனது மகன் மே 11 ஆம் நாள் கைது செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் உள்ள மற்றுமொருவரான துரைச்சாமி ஹரிகிருஸ்னன் (40) என்பவரை தாயும், மகளும் முன்னர் அடையாளம் கண்டுகொண்டிருந்தனர். வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட அவர் முன்னாள் போராளியாவார்.
ஆயுதங்கள் அற்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களையும், அப்பாவி பொதுமக்களையும் சிறீலங்கா இராணுவம் பதுங்கு குழி ஒன்றினுள் தடுத்து வைத்துள்ள புகைப்படங்களை சனல் போஃர் செய்தி நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது.
Atramaiil ullem