Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஆதரம் இருந்தால் அவற்றை சிறிலங்கா நீதிமன்றில் சமர்ப்பிக்கலாம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் சட்டத்தரணிகள் ஊடாக வழக்கு பதிவு செய்யலாம் என்று சவால் விடுத்திருக்கிறார் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாய ராஜபக்ச.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து .நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழு ஒன்றை அமைப்பது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார பணிப்பாளர் நாளை கொழும்பு செல்லவுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிறிலங்கா படையினர் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்குமானால், சிறிலங்காவின் நீதித்துறைக்கு முன்பாக அந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். ஊடகங்களுக்கு புகைப்படங்களையும் காணொலிகளை வழங்கி வருவது பயனற்ற செயல். சிறிலங்காவில் நீதித்துறை உள்ளது. அந்த கட்டமைப்பிற்கு முன்னால் ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். அல்லது காவல்துறையினரிடம்கூட சென்று முறையிடலாம் என்று கோத்தபாய சிங்கள ஊடகமான லங்காதீபவுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை தூக்கில்போடுவோம் என்று கோத்தபாய ராஜபக்ச பி.பி.ஸி. நிகழ்ச்சிக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to போர்க்குற்றம் புரிந்தமைக்கு ஆதாரம் இருந்தால் கொண்டுவரட்டும் பார்க்கலாம்: கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com