கடந்த மாதம் 18 ஆம் திகதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போர்வெற்றிவிழா கொண்டாட்டங்கள் கடுமையான காலநிலையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
தற்போது இரண்டாவது தடவையாக கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெற்றிவிழா கொண்டாட்டங்களில் சுமார் 9 ஆயிரம் படையினர் கலந்துகொள்வர் என்றும் -
இவர்கள் அனைவரும் வழமையான அணிவகுப்பு வரிசையில் நகர மாட்டார்கள் என்றும் இறுதிப்போரின்போது களத்தில் தமது நகர்வுகளை மேற்கொண்டதுபோன்று நிகழ்வில் மாதிரி நகர்வினை மேற்கொண்டு காண்பிப்பர் என்றும் ஊடகப்பேச்சார் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் இந்த வெற்றிவிழா நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.



0 Responses to வன்னிப்போரில் பங்குகொண்ட 9 ஆயிரம் படையினர் வெற்றிவிழா கொண்டாட்டங்களில்