Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்கள் குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம் என்று ஐக்கியநாடுகள் சபையின் முன்நாள் செயலாளர் நாயகம் ஹொபி அனான் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குர்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குர்றங்கள், இன சுத்திகரிப்பு போன்ற குர்றங்களை விசாரிப்பதற்காகவே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்றும் ஹொபி அனான் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறான குர்றம் புரிந்தவர்கள் கட்டாயமாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், எந்த வகையிலும் அவர்கள் தப்பிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் கூறினார். அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to போர்க்குற்றம் - சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம்: ஹொபி அனான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com