Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வருகின்ற சனிக்கிழமை 26/06/10 காலை 10 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் சகல மானிலக் கிளைகளினதும் வருடாந்தப் பொதுக் கூட்டம் அம்மானிலங்களில் நடைபெற இருக்கின்றது.

இதில் அங்கத்தவராக இருக்கும் அனைவரையும் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையினர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர். இந்த நிகழ்விற்கு வருகை தர முடியாதவர்கள் தமக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கலாம்.

இது தொடர்பான படிவம் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிவம் இல்லாதவர்களோ அல்லது கிடைக்கப் பெறாதவர்களோ அதற்குரிய படிவத்தினை அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே அன்பார்ந்த அவுஸ்திரேலிய தமிழர் பேரவை உறுப்பினர்களே...

நீங்கள் இந்த வருடாந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நாம் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

நன்றி.

மேலதிக விபரங்களிற்கு அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையைத் தொடர்பு கொள்ளவும். Phone:1300 660 629

0 Responses to அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் வருடாந்தப் பொதுக் கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com