சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர்குழு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு குறித்த சிறிலங்கா அரசு சீறி சினந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிவிப்புக்கு பின்னால் சூழ்ச்சியான நிகழ்ச்சிநழரல் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பு தொடர்பாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். ஐ.நா.வின் இந்த அறிவிப்பானது விடுதலைப்புலிகளுக்கு ஒக்ஸிஜன் கொடுக்கும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா.வின் அறிவிப்பு குறித்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சும் இன்று கடும்தொனியில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் -
ஐ.நா. செயலரும் சிறிலங்கா அரச அதிபரும் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி விடுத்த கூட்டறிக்கையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் காப்பு விடயத்தில் ஒருமித்த கருத்துடையவர்களாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், தற்போது ஐ.நா. மேற்கொண்ட நடவடிக்கை ஏற்கமுடியாததாகும்.
சிறிலங்கா என்பது இறைமையுள்ள சுயாட்சி கொண்ட நாடாகும். அந்த நாட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா. மேற்கொண்ட அந்த அறிவிப்பு அத்துமீறி தலையிடும் செயலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



0 Responses to ஐ.நா.வின் அறிவிப்பு குறித்து சிறிலங்கா கடும் கண்டனம்: புலிகளுக்கு உயிரளிக்கும் செயல் என்றும் குற்றச்சாட்டு