Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான திஸ்ஸநாயகத்திற்கு மன்னிப்பு வழங்கியதற்காக சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக, அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு தகவல் வெளியிட்டதன்மூலம், திஸ்ஸநாயகம் குற்றம் புரிந்திருப்பதாக அமெரிக்க செனட் சபை தவறாக அர்த்தம் கற்பித்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பொறுப்புவாய்ந்த அமெரிக்க செனட்டர்களின் இந்த செயற்பாடு ஊடகங்கள் மத்தியில் பாரிய வியப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திஸ்ஸநாயகத்தை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்த சிறீலங்கா அரசு, 100 நாட்களுக்கு மேலாக நீதிமன்றில் முன்னிறுத்தாது இழுத்தடித்து, பின்னர் வழக்கு விசாரணை என 21 மாதங்கள் தடுத்து வைத்திருந்தது.

திஸ்ஸநாயகம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்த சிறீலங்கா காவல்துறையினர் 20 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

கடந்த மே மாதம் இவருக்கு தண்டனை விலக்கு அளித்து மன்னிப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, கடந்த வாரம் அவரை விடுதலை செய்து நாட்டைவிட்டு வெளியேறவும் அனுமதி அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் திஸ்ஸநாயகமும், அவரது மனைவியும் அமெரிக்கா சென்றுள்ளனர்.

0 Responses to திஸ்ஸநாயகம் குற்றம் புரிந்தாரா? மகிந்த மன்னிக்கவும், அமெரிக்கா வாழ்த்தவும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com