Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் மே மாதம் நந்திகடல் பிரதேசத்தில் போரின் இறுதி சில நாட்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளின் சடலங்கள் அவசர அவசரமாக புதைக்கப்பட்டன. இந்த சடலங்களை மீள தோண்டி எடுத்து அவற்றை சாட்சியங்கள், தடயங்களின்றி அழிப்பதற்கான பொறுப்பு சீன நிறுவனமொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.

விசேட அபிவிருத்தி திட்டமொன்ற பெயரில் இந்த நந்திகடல் பிரதேசம் சீன நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதாக இராஜதந்திரத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீன்பிடி அமைச்சின் அபிவிருத்தி திட்டமொன்ற போர்வையில் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்பில் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

நந்திக்கடல் பகுதியில் மீன்பிடி திட்டமொன்றை மேற்கொள்ள சீன நிறுவமொன்று அனுமதி கோரியிருப்பதாக மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பல நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டுவருகின்றமையும் -

அத்துடன், அடுத்துவரும் மாதங்களில் .நா. சபையும் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழு ஒன்றை நியமிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to நந்திக்கடல் பிரதேசத்தில் போர்க்குற்ற ஆதாரங்களை அழிக்கும் பொறுப்பு சீனாவிடம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com