Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா என்ன செய்ய வேண்டும் எனவோ, அல்லது கடந்த காலங்களில் போரின்போது என்ன செய்தது என்பது பற்றியோ ஏனைய நாடுகள் தலையிட்டு ஆராய வேண்டிய அவசியம் இல்லை எனவும், தேவையற்ற தலையீட்மை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சிறீலங்கா சென்றுள்ள யப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், சிறீலங்காவின் உள்நாட்டு விடயங்களில் ஏனைய நாடுகள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, சிறீலங்கா அரசுத் தலைவர், அல்லது அமைச்சர்கள் கூறுவதுபோன்று கூறியிருக்கின்றார்.

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் உதவியாளரும், இனப்படுகொலை, மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றம் போன்ற துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளான சமந்தா பவல், மற்றும் டேவிட் பிறஸ்மான், ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான்-கி மூனின் உதவியாளரும், அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான தூதுவருமான லின் பஸ்கோ ஆகியோர் இலங்கையில் தங்கியிருக்கும் நிலையில் யப்பான் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் முதலீடு மற்றும் சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதில் யப்பானிய அரசாங்கம் முன்னணியில் இருந்து வருவதுடன், இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி செய்வதாகக்கூறி 39 பில்லியன் யென் (426.4 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றிலும் யப்பான் சிறீலங்காவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

யப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி 20வது தடைவ சிறீலங்கா சென்றுள்ளார்.

0 Responses to சிறீலங்கா விடயத்தில் ஏனைய நாடுகள் தலையிடக் கூடாது: அகாசி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com