Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் பாராளுமன்றம் முன்பாக வாரம் தோறும் புதன்கிழமைகளில் பி.பகல் 15.00 மணிமுதல் 18.00 மணிவரை பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் தொடர்ச்சியான ஒன்றுகூடல் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

23.06.10 நடைபெற்ற ஒன்றுகூடலின் போது 50வரையிலான தமிழ் மக்களும், பிரான்ஸ் மக்களும் கலந்து கொண்டதுடன் அண்மையில் ஐரோப்பிய அரசு சிறீலங்கா அரசுக்கு ஐபிஎஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் 15 நிபந்தனைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மகஐர் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ் ஒன்றுகூடலினை தமிழீழ மக்கள் பேரவையும் ஏனைய தமிழர் அமைப்புக்களும் தொடர்ந்து நடாத்தி வருவதும் தாயகப்பற்றுக்கொண்ட தமிழ் மக்கள் தொடர்ந்து பங்குபற்றிவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to பிரான்ஸ் பாராளுமன்றம் முன்பாக நடைபெற்ற ஒன்றுகூடல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com