Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தப்போவதாக கனடா நேற்று ஞாயிற்றுக்கிழமை சூளுரைத்திருக்கிறது.

புகலிடம் கோருவோர் படகுப் பயணத்தை ஆரம்பிக்க முன்னரே அதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.வி.சன்சீ (கடல்சூரியன்) கப்பலில் வருகை தந்துள்ள 490 தமிழ்குடியேற்றவாசிகள் மீதான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக கனடிய ஊடகங்கள் தெரிவித்தன.

துறைமுகங்களிலிருந்து இக்கப்பல்கள் பயணத்தை ஆரம்பிக்க முன்னரே இவற்றை கனடிய புலனாய்வுத் துறை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அக்கப்பல்கள் வந்து சேர்ந்த பின்னர் உண்மையைக் கண்டறியும் விடயங்களை ஆரம்பிக்க முன்பாக இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கனடிய பொதுமக்கள்பாதுகாப்புத்துறை அமைச்சர் விக் ரௌஸ் கூறியதாக குளோப் அன்ட் மெயில் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தலின் ஒரு அங்கமாக கடல்சூரியன் கப்பல் இருக்கலாமென அதிகாரிகள் சந்தேகப்படுவதாக வெள்ளிக்கிழமை விக் ரௌஸ் கூறியிருந்தார். கடல்சூரியன் கனடாவிற்குள் பிரவேசித்த சில மணிநேரத்தின் பின்னரே அதிகாரிகள் இச்சந்தேகத்தை வெளியிட்டதாக அவர் கூறினார்.

ஆதாரங்களை பார்த்தால்... இது தமிழ்ப்புலிகளின் வேலையாகத் தோன்றுகிறது என்று விக் ரௌஸ் கூறியுள்ளார்.

இதேவேளை கப்பலில் புலிகளின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்ற முடிவுக்கு கனடா வந்திருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உண்மையான ஆதாரங்கள் இல்லாமல் முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது. கனடிய சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொருவரும் கூறும் விடயத்தை நாம் மதிப்பீடு செய்யும் வரை முடிவுக்கு வந்து விடக்கூடாது. உண்மையான கோரிக்கையா அல்லது இல்லையா என்பது பற்றி எமக்குத் தெரியாது. அவர்களுடைய கோப்புகள் துரிதமாக ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர்கள் இங்கு இருக்க முடியும். இல்லையேல் அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று புதிய ஜனநாயகக் கட்சியின் குடிவரவுத்துறை விமர்சகரான ஒலிவியா ஷோ கூறியுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்தப்போவதாகக் கனடா அரசு சூளுரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com