தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி இன்று 23வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.மலைப் பிரதேசங்கள் ஊடாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தன் நேற்றும், இன்றும் கடும் மழையின் மத்தியில் தனது பயணத்தை உறுதியுடன் மேற்கொண்டு வருகின்றார்.
மழை காரணமாக இரவிலும், பகலிலும் நடை பயணம் மற்றும் தங்குமிடங்களில் பாரிய இடர்கள் எதிர்நோக்கப்படுகின்ற போதிலும் சிவந்தனும், அவர்களுக்கு உதவியாகச் செல்பவர்களும் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கடும் மழையின் மத்தியில் நேற்று 30 கிலோமீற்றர்கள் நடந்திருந்த சிவந்தன் இன்றும் மக்களின் ஆதரவுடன் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.
இன்று பரிஸ் நகரில் இருந்து சென்ற பலர் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்திருப்பதுடன், நேற்று முதல் சுவிசில் இருந்தும் ஒரு சிலர் இந்தப் பயணத்தில் இணைந்து வருகின்றனர்.
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு இந்த மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to 23வது நாளாக கடும் மழையின் மத்தியில் சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம்