Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலிய கிறீன் கட்சியை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் தேசிய அளவில் தமிழர் சார்பில் நேரடியாக போட்டியிடும் செல்வி பிராமி ஜெகனும் கலந்துகொள்ளவுள்ள பொதுக்கூட்டம் ஒன்று நாளை சனிக்கிழமை மொனாஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதாக கிறீன் கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

அச்செய்திக்குறிப்பின் முழுவடிவம் வருமாறு:

Tamils for Greens எனும் அமைப்பானது, ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை ஒரு பொதுக் கூட்டம் ஒன்றை மெல்பேன் கிளேட்டன் மொனாஸ் பல்கலைக் கழகத்தில் - றொருண்டா எனும் மண்டபத்தில் ஒழுங்கு செய்துள்ளது.

இப் பொதுக் கூட்டத்திற்கு கிறீன் (பச்சைக்) கட்சியைத் சேரந்த செனற்றர் சேறா ஹான்_ஜங் மற்றும் உள்ளூர் Green அரசியல் அமைப்பின் பிரதிநிதிகளான கலாநிதி றிச்சாட் டி_நராலி, திரு.அடம் பாண்ட், திரு.கொலின் ஹாட்லண்ட், நியுசிலாந்திலிருந்து பச்சைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கீத் லொக், இவர்களுடன் முதன்முறையாக தேசிய அளவிலான அவுஸ்திரேலியப் பொதுத்தேர்தலில் நியுசவுத்வேல்ஸ் மானிலத்தில் கிறீன்(பச்சை) கட்சியின் செனற் சபைக்கான தேர்தலில் 3வது வேட்பாளராக போட்டியிடும் தமிழரான செல்வி பிராமி ஜெகன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இப் பொதுக்கூட்டத்தில் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்துகொண்டு எமது முழு ஆதரவையும் தெரிவிக்குமாறு Tamils for Greens அமைப்புத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றது. இன்று அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திலும், வெளியிலும் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை உரத்துக் கூறியவர்கள் இந்தக் கிறீன் அரசியலமைப்பினர் ஆவர்... ஆகவே... இன்று எமது முழு ஆதரவையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எமது ஒரு மிக இன்றியமையாத ஒரு தேவையாகும்.

அத்துடன் உங்களிடம் உள்ள கருத்துக்களையும், ஆதங்கங்களையும் அவர்களிற்கு தெரியப்படுத்தவும், உங்கள் நண்பர்களிற்கும் இக்கூட்டத்தைப் பற்றி தெரியப்படுத்தி திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

காலம் - ஓகஸ்ட் 14ம் திகதி சனிக்கிழமை(14th August 2010)

நேரம் - மாலை 5மணிக்கு(Time: 5:00 -7:00 PM)

இடம் - மெல்பேன் - மொனாஸ் பல்கலைக் கழகம் - றொருண்டா மண்டபம்

Venue: Rotunda Theatre (R4), Building 8, Monash University, Clayton (Melway Ref: 70 F11)

- Tamils for Greens
அமைப்பினர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் தமிழர்க்கான பொதுக்கூட்டம்! பிராமி ஜெகன் கலந்துகொள்கின்றார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com