Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு பத்திரிகையாளராக வருவதே வித்தியாவின் கனவாக இருந்தது என அவளின் வகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவில் வன்புணர்வின் படுகொலை கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா தொடர்பில், அவரின் வகுப்பாசிரியர் கருத்து வெளியிட்டுள்ளார்.

2010ல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் எனது வகுப்பிற்கு புதிய மாணவி ஒருவர் வந்திருபதாக மாணவர்கள் கூறினர்.

பார்த்தபோது வகுப்பின் கடைசி வரிசையில் இருந்த அந்த மாணவி வெருட்சி உடன் எழுந்து நின்றாள். பெயரை கேட்டதும் ,”வித்தியா” என்றாள்.

ஆங்கில பாடம் என்றல் வித்தியா என்றே அந்த வகுப்பு மாணவர்கள் கூறும் அளவுக்கு அவளின் திறமை இருந்தது . ஆங்கிலம் மட்டும்மல்ல எல்ல பாடங்களிலும் திறமை காட்டிய அவளுக்கு கணிதம் மட்டும் சவால் விட்டது .

அதில் கவனம் எடு என்று எல்லா ஆசிரியர்களுமே கூறும் பொது அவளின் பதில் “சுட்டுபோட்டாலும் வராது சேர்”.

எதிர்கால இலட்சியம் பற்றி ஆங்கிலத்தில் ஒருமுறை நான் எழுத சொன்ன போது தான் ஒரு பத்திரிகையாளராக வருவதே நோக்கம் என்று எழுதி இருந்தாள்.

உயர் தரத்தில் கூட அந்த துறையை தான் ஒரு பாடமாக அவள் தெரிவு செய்து படித்தாள்.

ஜனாதிபதி செயலணி குழுவின் ஆங்கில பாட இறுவட்டுகள் கொழும்பில் வைத்து வழங்கப்பட போது எம் பாடசாலை தரப்பில் இவளை தெரிவு செய்தபோது ஆங்கிலத்தில் கதைக்க வேண்டி வருமா என்று அப்பாவியாக அவள் கேட்டது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

மகா வித்தியாலயத்தில் இருந்து நான் இடமாற்றம் பெற்ற பொது அதை ரத்து செய்ய முடியதா என்று ஒரு மகளை போல் அவள் வினவியது இன்னும் மனதை நெருடுகிறது .

வேலணை மத்திய கல்லூரிக்கு ஒரு மாதம் முன்னர் எதோ செமினார் என்று வந்த போது கூட என்னை கண்ட போது சிரிப்புடன் ஓடி வந்து அளவளாவி அவளின் நன்றி விசுவாசத்தை கூறியது இன்னும் என்னுள் எதிர் ஒலிக்கிறது .

இறப்பு பொதுவானது .ஆனால் இவளின் இறப்பு கொடூரம் அந்த அப்பாவி பிஞ்சுக்கு பொருத்தம் இல்லாதது . எப்போதும் தலை வலிக்கிறது கண் குத்துது என்று அடிக்கடி கண்ணீர் விடும் அவள் இறுதி நேரத்தில் என்ன அவஸ்தை பட்டிருப்பாள்..

கடவுளே ….. இறுதி சடங்கில் நாம் மழை இல் தோய்ந்த படி சென்றது நல்லதே ..எமது கண்ணீர் வெளி இல் தெரியக் கூடாது .. போய் வா மகளே …….

0 Responses to காமுகர்களால் சிதைக்கப்பட்ட வித்தியாவின் எதிர்கால கனவு என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com