Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னர் சீறீலங்காவில் சிங்களப்படைகள் இரத்தக் காட்டேரிகளாக கூத்தாடியதைப் போல இப்போது சிரியா படைகள் கூத்தாடி வருகின்றன.

நேற்று சனிக்கிழமை மட்டும் 83 பேருடைய உயிர்களை காவுகொண்டு இரத்தக்காட்டேரிகளாக நடமிட்டன சிரியப் படைகள்.

இறந்தவர்களில் பெருந்தொகையானவர்கள் பெண்கள், குழந்தைகள் என்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த அவலம் நடந்தேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதற்குப் பிறகும் ரஸ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது அவதானிக்கத்தக்கது.

நேற்று சம்பவம் நடைபெற்றபோது கருத்துரைத்த ரஸ்யா ஐ.நாவின் பொருளாதார தடையோ, அல்லது ஆயுத பிரசன்னமோ சிரியாவிற்குள் நடத்தல் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.

ரஸ்யா, சீனா, ஈரான் ஓர் அணியாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இன்னோர் அணியாகவும் சிரியாவிற்குள் மோதல் நடைபெறுகிறது.

இது இவ்விதமிருக்க போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க லிபியா சென்ற சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் நீதிபதிகள் நால்வரை லிபிய அரசு பிடித்து சிறையில் போட்டுள்ளது.

இவர்கள் தற்போது லிபிய சிறையில் இருக்கும் கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாத்தை விசாரிக்க சென்றவேளை கைதாகியுள்ளனர்.

தமது பிரதிநிதிகளின் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக போர்க்குற்ற நீதிமன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் அமெரிக்க துணை மாநிலமான அலபாமாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அருகாமையில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பேர் மரணமடைந்து இரண்டுபேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

அவுபேர்ண் பல்கலைக்கழக விடுதிகளை அண்டி இந்தச் சம்பவம் நடந்துள்ளது, விசாரணைகள் தொடர்கின்றன.

மறுபுறம் கென்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோர்ஜ் சைற்ரோற்றி, உதவி அமைச்சர் ஒருவர் அவரோடு பயணித்த மேலும் நால்வர் உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியதால் மரணமடைந்தனர்.

கென்யத் தலைநகர் நைரோபியில் இந்த அனர்த்தம் நடைபெற்றுள்ளது.

மரணித்த பாதுகாப்பு அமைச்சர் அடுத்த தடவை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

பிரேமதாச ஆட்சிக்காலத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கருதப்பட்ட உபாலி விமான விபத்தில் இறந்ததைப் போல இவருடைய விபத்து மரணம் நடந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

அலைகள்

0 Responses to சிரியா 83 பேர் அமெரிக்காவில் 3 பேர் கென்ய பாதுகாப்பு அமைச்சர் மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com