Dijon, Longvic, Ouges போன்ற இடங்களைக் கடந்து நடந்து சென்றுள்ள சிவந்தன், இன்று காலை முதல் Longecourt என்ற இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். இன்றைய மனிதநேய நடை பயணத்தில் 6 பேர் சிவந்தனுடன் இணைந்து நடக்கின்றனர்.
நேற்று 11 மணித்தியாலங்களில் 42 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து நடந்திருந்தனர். நேற்று மழையின் மத்தியில் இந்த நடை பயணம் இடம்பெற்றதுடன், இன்று காலையும் மழை பெய்து வருகின்றது.
நேற்றைய மனிதநேய நடை பயணத்தில் 12 அகவையுடைய பைரவி என்ற சிறுமி 20 கிலோமீற்றர்கள் சிவந்தனுடன் இணைந்து நடந்து, சிவந்தனின் கோரிக்கைக்கான தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 772 கிலோமீற்றர் நடந்துள்ள சிவந்தன், ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 203 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஐரோப்பிய தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கில் மக்கள் ஐ.நா முன்றலில் அணி திரள்வர் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.




மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம்