Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களே அதிகளவில் வவுனியா, நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களில் 20,000 பேர் புதுக்குடியருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வன்னி பாதுகாப்புத் தலைமையகம் அறிவித்துள்ளது.

நலன்புரி நிலையங்களில் மொத்தமாக 32, 898 பேர் தங்கியிருப்பதாகவும், இவர்களில் பலர் தற்காலிகமாக முகாம்களை விட்டு வெளியேறுவதற்கான அனுமதிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 233,844 இதுவரையில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் துரித கதியில் எஞ்சியுள்ள நலன்புரி நிலைய மக்களும் மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

இதேவேளை அண்மையில் இந்தியா சென்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாம் சந்தித்த அரசியல் அதிகாரிகளிடம் இன்னும் முகாம்களில் 10 ஆயிரம் பேர் மட்டுமே தங்கியிருப்பதாக கூறியிருந்தமை அப்பட்டமான பொய் என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்களே அதிகளவில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com