200 ஈழத்தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் எம்.வி.சன் ஸீ எனும் கப்பல் கனேடிய கடல்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 200 கடல்மைல் (370 கிலோமீற்றர்) எல்லைகொண்ட கனடாவின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயப் பகுதியை அடைந்த இக்கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா மாநில கரையோரத்தை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர் என கனேடிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.இக்கப்பலின் தற்போதைய வேகத்தின்படி, வியாழன் மாலை அல்லது வெள்ளி காலையில் கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட 12 கடல்மைல் (22 கி.மீ) நீர்பரப்பை இக்கப்பல் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பலிலுள்ள ஆண்களும் பெண்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். சிறார்கள் இருப்பின் அவர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலத்தின் சிறுவர் மற்றும்பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் பராமரிப்பில் வைக்கப்படுவார்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஈழத்தமிழர்களுடன் சென்ற கப்பல் கனடிய கடற்பரப்பை அடைந்தது