சிறீலங்காவில் பல வருடங்களாக நடைபெற்ற போரில் பல பத்தாயிரம் மக்கள் காணாமல்போள்ளனர். அனைத்துலக காணாமல்போனோர் நினைவு நாளில் நாம் அவர்களை மறந்துவிடக் கூடாது என நேற்று (30) நடைபெற்ற அனைத்துலக காணாமல்போனோர் நினைவு தினம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகில் பலவந்தமாக காணாமல்போனவர்களை நினைவுகூரும் நாள் இன்றாகும். காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதற்கு உலகம் நடவடிக்கையையும், அழுத்தங்களையும் மேற்கொள்ளவேண்டும்.
சில நாடுகளில் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சமயம் பலவந்தமாக காணாமல்போகும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த பல தசாப்தங்களாக சிறீலங்காவில் பல பத்தாயிரம் மக்கள் காணாமல்போயுள்ளனர்.
அதன் அண்மைய நிகழ்வாக ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட காணாமல்போயுள்ளார். காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இலங்கையில் பல ஆயிரம் மக்கள் காணாமல் போயுள்ளனர்: அனைத்துலக மன்னிப்புச்சபை