Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் இன்று வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது திருமுறிகண்டி, இந்துபுரம், பொன்னகர் கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாமலேயே நடைபெற்றுள்ளதாக எமக்கு நம்பகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இலங்கை அரசின் நிருபமாவுக்கான நிகழ்ச்சி நிரலில், குறித்த கிராம மக்களைச் சந்திப்பதற்றான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.

மெனிக்பாம் மக்களைச் சந்தித்த பின்னர் வவுனியா வீதிவழியாகச் சென்ற நிருபமாராவ் வவுனியா நகரசபை மண்டபத்திற்கு நேரடியாகச் சென்றிருக்கின்றார்.

ஏதும் அறியாத வடமாகாண ஆளுநர் மற்றும் இலங்கை அரசின் உயர் அதிகாரிகள், வவுனியா மாவட்ட அரச அதிபர் உட்பட்டோர் அவரைப் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர்.

அங்கு சென்றவேளை, திருமுறிகண்டி, இந்துபுரம், பொன்னகர் உட்பட்ட கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகள் நிருபமாராவை வரவேற்றுள்ளனர்.

அதனை அடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமைதாங்கி நடத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் மக்களின் மீள்குடியேற்றத் தாமதம், மற்றும் தமது சொந்தப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் விரிவாக விளக்கியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த நிருபமா இந்த விடயங்கள் குறித்து உரியவர்களுடன் பேசுவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு நடைபெற்றபோது இலங்கை அரச தரப்பினர் மிகவும் ஆத்திரமடைந்த நிலையில் காணப்பட்டதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போதே அங்கிருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் 'நீங்கள் யாரிடம் என்ன சொன்னாலும் யாரையும் விடப் போவதில்லை' என இராணுவ அதிகாரி ஒருவர் இரகசியமாகத் தெரிவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக இந்தியப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மேற்கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

வழமையாக வெளிநாட்டுப் பிரதிநிகள் முகாம்களுக்குச் செல்கின்ற போது திட்டமிட்ட வகையில் தமக்கு சாதகமான இடங்களையே அரசு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாமல் முறிகண்டி மக்களைச் சந்தித்தார் நிருபமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com