மீள்குடியேற்றம் என்ற பெயரில் முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரத்து இருநூற்று பதினைந்து மக்கள் விசுமடுப் பகுதியில் மூன்று மாதகாலமாக எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ; பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்னாள் முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பிரதேசத்திற்கான பயணத்தினை மேற்கொண்டு மக்களைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசுவடுப் பிரதேசத்தின் குமாரசுவாமிபுரம், மயில்வாகனபுரம், கொழுந்துப்புலவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 255குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து இருநூற்றுப் பதினைந்து மக்கள் கடந்த யூன் மாதம் வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து கொண்டுவரப்பட்டனர்.
இவர்களில் குமாரசுவாமிபுரம் கிராமத்தினைச் சேர்ந்த 69 குடும்பங்கள் றெட்பானாப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
மயில்வாகனபுரம், கொழுந்துப்புலவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏனைய குடும்பங்கள் பாடசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உலக உணவுத்திட்டத்தினால் தற்போது வழங்கப்பட்டு வருகின்ற பொருட்களில் அரிசி வழங்கப்படுவதில்லை. எந்தவித வருமானமும் இன்றி வாழ்ந்து வருகின்ற மக்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
எந்தவருமானமும் இன்றி வாழ்ந்து வருகின்ற மக்கள் சில மீற்றர்கள் தூரத்தில் உள்ள தமது காணிகளுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அவ்வாறு செல்கின்றவர்கள் தாக்குதல்களுக்கு உட்படுவதாக கண்ணீர் மல்க எம்மிடம் கவலை வெளியிட்டனர்.
தமது சொந்தக் காணிகளில் தாம் சென்று ஒரு தேங்காய் கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும், அங்கிருந்து தேங்காய்கள் திருடப்பட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
மலசல கூட வசதிகள் இல்லாத நிலையில் அயலில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் செல்வதாகவும், இரவுவேளையில் அதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்ற அந்த மக்கள், குறிப்பாக பெண்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று றெட்பானாப் பகுதியில் உள்ள குமாரசுவாமிபுரம் மக்களின் பாவனைக்கென ஒரு கிணறு மட்டுமே உள்ளது. ஆனாலும் அந்தக் கிணறு சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றது. அந்தக் கிணற்று நீரினையே குடிநீராகவும், ஏனைய தேவைக்காகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். அதே கிணற்றினையே அப்பகுதி இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர். இதனால் அங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ள அதேவேளை நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவருகின்றது.
இந்த மக்களுக்கான சுகாதார வசதி தொடர்பில் குறித்த பகுதிக்குப் பொறுப்பான சுகாதார அமைப்புக்களோ, பிரதேச சபையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்தனர்.
மீள்குடியேற்றத் தாமதம் குறித்துக் கேட்டபோது,
குறித்த கிராமங்களின் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களை குடியமர அனுமதிப்பதாக அதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி தெரிவிப்பதாகவும், முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் குடியமர அந்த மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி அனுமதி மறுப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று மாதங்களாகியும் எந்தவித தொழில் முயற்சியும் இன்றி வாழ்ந்து வருகின்ற குறித்த கிராம மக்கள் தம்மை தமது பகுதிகளில் மீளக் குடியமர அனுமதித்தால் போதும், எமது பொருளாதாரம் உட்பட்ட அனைத்தையும் நாமே பார்த்துக்கொள்வோம் எனக் கோரிக்கை விடுத்தனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மீள்குடியேற்றிய விசுவமடு மக்கள் தமது காணிகளில் தேங்காய் கூட எடுக்க முடியாத நிலை