Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிவந்தன் அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் iயில் சுவிஸ் சூரிச்சசிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவர் மேற்கொண்டுள்ளனர்.



செஞ்சோலையில் வைத்து படுகொலைசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் 4ம் ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு அவர்களுக்கு ஈகைச்சுடறேற்றி அகவணக்கம் செலுத்தி தங்கள் மனிய நேயப்பயணத்தை நேற்றுக் காலை 10:45 மணிக்கு Helvetiaplatz இருந்து ஆரம்பித்துள்ளனர்.

சிவந்தனின் அதே கோரிக்கைகளான,

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறிலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்


போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இவ் மூவருக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் மக்கள் சிலரும் இவர்களுடன் இணைந்து தங்கள் ஆதரவை வழங்கிவருகின்றனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணமானது 40 கிலோமீற்றர் கடந்து Aargau என்ற இடத்தை சென்றடைந்தனர்.

தங்கள் நடைப்பயணத்தின்போது சிவந்தனின் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வெளிநாட்டு மக்களுக்கு வழங்கியும் மக்கள்படும் துன்பங்களை எடுத்துக்கூறியும் தங்கள் பயணத்தை தொடர்தவண்ணம் உள்ளனர்



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிவந்தனின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க சுவிசிலிருந்து மூவர் ஐ.நா சபை நோக்கி நடை பயணம் (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com