Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன் மீது முதலாவது இராணுவ நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கி செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி சரத் பொன்சேகாவின் இராணுவ தரங்கள் மற்றும் பதக்கங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பிலான தீர்ப்பை நான்கு நட்சத்திர தரத்தைக் கொண்ட அதிகாரியான தமக்கு தாழ்ந்த தரத்திலான அதிகாரி ஒருவர் வழங்கியுள்ளமை நகைச்சுவையான விடயம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறித்த ஆங்கில ஊடகம் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவின் ஊடாக இந்த கேள்வியை எழுப்பி அதற்கான பதிலை பிரசுரித்திருந்தது.

தாம் ஒரு நான்கு நட்சத்திர தரத்திலான அதிகாரி எனவும் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை: சரத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com