Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவில் இருந்து .நா.நோக்கி நீதிகேட்டு கடந்த 22 நாட்களாக நடைபயணத்தை மேற்கொண்டிருக்கும் சிவந்தனுக்காக குரல்கொடுக்குமாறு தமிழர் ஏதிலிகள் பேரவையினர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

கவன ஈர்ப்புப் போராட்ட வடிவங்களில் நடை பயணம் மிகவும் வலிமை வாய்ந்தது. உடல் உறுதியும் உணர்வும் கலந்த சத்திய விரதமாக நடை பயணம் கருதப்படுகிறது. சிவந்தனின் நடை பயணம் ஈழத்தமிழினத்தின் அவல நிலையை உலகிற்கு உணர்த்தவும் சர்வதேச சமூகத்தின் பார்வையை எம்பால் திருப்பவும் உதவுகிறது.

தமிழர் பகுதி எல்லாம் இராணுவ முகாங்கள் அமைத்து மக்களை ஆயுத முனையில் வைத்து இருக்கின்றான். அங்கு வாழும் மக்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அச்சநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு வாழும் மக்களின் நீதிக்காகசிவந்தனின் காலடி ஓசை தமிழினம் வாழும் நாடெல்லாம் ஒலிக்கின்றதுஇப்படியான தொடர் போராட்டங்களை புலம்பெயர் வாழ் மக்கள் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

01) சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
02) தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
03) மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறிலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து nஐனீவா நோக்கி செல்லும் சிவந்தன் அவர்களின் இறுதி நிகழ்வில் மனித நேய அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகளும், புலம்பெயர் வாழ்மக்களும் கலந்து கொண்டு அவலப்பட்டு வாழ்ந்து வரும் எம் மக்களுக்காக குரல் கொடுப்போம்.


நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
பேராசிரியர் . சிவசண்முகம்
செயலாளர்,
தமிழீழ எதிலிகள் பேரவை

*********************************

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிவந்தனின் காலடி ஓசை தமிழினம் வாழும் நாடெல்லாம் ஒலிக்கட்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com