Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெற்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி வெடிப்பதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அறிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு கிளர்ச்சி வெடிக்கும் பட்சத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் அதன் பிரதான பங்காளியாக இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களும் நாட்டின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்ற வகையில் இந்நாட்டில் மீண்டும் ஒரு கிளர்ச்சி வெடிக்க அரசாங்கம் இடமளிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அமைச்சர் கெஹலியவின் கூற்றை வைத்துப் பார்க்கும் போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடை செய்யப்படலாம் என்று தெரிய வருகின்றது.

பிரஸ்தாப மாணவர் அமைப்பு உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் என்று அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச வலியுறுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தெற்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி வெடிக்கலாம்: ரம்புக்வெல்ல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com