Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோதபாய ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாதென சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக தாம் செய்திகளை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது பத்திரிகை நிர்வாகம் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த போதிலும் தமக்கு அதில் முழுமையான உடன்பாடு இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா தமக்கு அளித்த நேர் காணால் எந்தவித திரிபுபடுத்தலும் இன்றி செய்தியாக வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் சட்டத்தரணியினால் மேற்கொள்ளப்பட்டு வந்த குறுக்கு விசாரணை முடிவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி பெட்ரிக்காவை குறுக்கு விசாரணை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to கோதபாயாவுடன் தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை: சண்டே லீடர் பிரதம ஆசிரியர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com